Advertisement

Responsive Advertisement

Nouns - பெயர்ச்சொற்கள்

பிரபஞ்சத்திலுள்ள இடங்கள், பொருற்கள், மனிதர்கள், உயிரினங்கள், உணர்வுகள் என நாம் உலகில் காணும் அல்லது பயன்படுத்தும் பெயர்கள் யாவும் பெயர்ச் சொற்கள் என்ற வகைக்குள் அடங்கும். ஆங்கிலத்தில் இவை 'Noun' என அழைக்கப்படுகிறது. இச்சொல் “nōmen” (பெயர்) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிருந்து தோன்றியதாகும்.

ஆங்கிலத்தில் பெயர்ச்சொற்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
  1. Proper Nouns
  2. Common Nouns
  3. Collective Nouns
  4. Abstract Nouns
  5. Compound Nouns
  6. Countable Nouns
  7. Uncountable Nouns

Proper Noun - சிறப்புப் பெயர்ச்சொல்

மனிதர்கள், உயிரினங்கள், இடங்கள், பொருட்கள் போன்றவற்றின் பெயரை குறிப்பாக சொல்லும் போது அவை சிறப்புபுப் பெயர்ச் சொற்கள் எனப்படும்.
உதாரணமாக : மனிதன் என்பது பொதுவான பெயராகும். ஆனால் மொஹமட், அருன், விக்டர், பாத்திமா என குறிப்பிட்டுச் சொல்லும் போது அவை சிறப்புப் பெயர்ச் சொல்லாகும். மேலும் அறிந்து கொள்ள கீழே தரப்பட்டுள்ள உதாரணங்களைப் பார்க்கவும்.
  • Man (மனிதன்)        :    Mohamad, Arun, Victor
  • Place (இடம்)           :    School, Colombo, Japan
  • Thing (பொருள்)   :   Pen, Table, Book
  • Animal (மிருகம்)    :    Dog, Lion, Bird
  • Language (மொழி)   :   English, Tamil, Arabic

இங்கு மனிதன், இடம், பொருள், மிருகம், மொழி போன்றவை பொதுவான பெயர்ச் சொற்களாக இருக்கின்ற அதேவேலை அதற்கு அடுத்ததாக தரப்பட்டுள்ள மூன்று பெயர்ச் சொற்களும் சிறப்புப் பெயர்ச் சொற்களாகும்.
சிறப்புப் பெயரசொற்கள் ஒரு வாக்கியத்தில் எவ்விடத்தில் வந்தாலும் அதன் முதலெழுத்து கெப்பிட்டல் ஆகவே இருக்கவேண்டும் (மேலே தரப்பட்டுள்ள உதாரணங்களை பார்க்கவும்).


Common Noun - பொதுப் பெயர்ச்சொல்

ஒரே வகையான பொருற்களுக்கு அல்லது நபர்களுக்கு குறிக்கப்படும் பொதுவான பெயர்களே Common Nouns என அழைக்கப்படும். மேலே Proper Nouns (சிறப்புப் பெயர்ச்சொல்) என்ற தலைப்பின் கீழ் இது பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். அதையும் பார்க்கவும்.

Common என்றால் பொது என்ற அர்த்தமாகும். நாடு, மாணவன், ஆசிரியர், பறவை, வாகனம் போன்றவற்றை பொதுவான பெயர்ச்சொற்களுக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

நாடு என்பது பொதுப் பெயரச் சொல் ஆகும். இவ்வகையிலுல்ல இலங்கை, இந்தியா என ஒவ்வொரு நாட்டையும் குறித்துச் சொல்லும் போது அது சிறப்புப் பெயர்ச்சொல் என்ற வகையில் அடங்கும்.

Common Nouns மற்றும் Proper Nouns இடையிலான வேறுபாட்டினை விளங்கிக் கொள்ள கீழே தரப்பட்டுள்ள உதாரணங்களைப் பார்க்கவும்.

          Common Nouns                                      Proper Nouns
  • Country (நாடு)             -   Sri Lanka, India, Pakistan
  • Animal (மிருகம்)           -   Dog, Cat> Lion
  • Student (மாணவன்)        -     Mohamad> Arun> Victor
  • Television (தொலைக்காட்சி) -   Sony, Singer, Panasonic
  • Furniture (தளபாடம்)       -   Table, Chair, Cupboard

Collective Noun - கூட்டுப் பெயர்சொல்

ஒரு இனத்தை அல்லது ஒரு குழுவை அல்லது ஒரு கூட்டினை ஒட்டு மொத்தமாக குறிக்கும் பெயர்களை 'கூட்டுப் பெயர்சொற்கள்' என அழைக்கப்படுகிறது. இவை ஒருமை போலத் தோன்றினாலும் உண்மையில் பண்மைச் சொற்களாகும். 
உதாரணங்கள்:
  • Army       -    இராணுவம்
  • Bunch               -         கொத்து
  • Crowd      -    கும்பல், கூட்டம்
  • Colony      -    குடியேற்றப் பகுதி
  • Committee        -    குழு

Abstract Noun - பண்புப் பெயர்சொல்

கண்ணால் பார்க்கவோ, தொட்டுணரவோ முடியாத மனோ ரீதியான பண்புகளை குறிக்கும் பெயர்ச் சொற்கள் பண்புப் பெயர்ச்சொற்கள் எனப்படும்.

உதாரணங்கள் :
  • Skill     -   திறமை
  • Opinion     -        கருத்து
  • Honesty  -       நேர்மை
  • Love    -    அன்பு
  • Anger   -    கோபம்

Compound Noun - கலவைப் பெயர்சொல்

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் கலந்து இன்னுமொரு தனிச்சொல்லாக பயன்படும் சொற்கள் அல்லது பெயர்கள் கலவைப் பெயர்ச்சொற்கள் என்றழைக்கப்படுகிறது.

உதாரணங்கள் :
  • Bathroom    - குளியலரை
  • Blackboard - கரும்பலகை
  • Seafood        - கடலுணவு
  • Bus stop      - பேருந்துத் தரிப்பிடம்
  • Son-in-law  - மருமகன்

Countable Noun - கணக்கிட முடியுமான பெயர்ச்சொல்

கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் என்பன எண்ணிக்கையால் எண்ணி கணக்கிடக்கூடிய சொற்கள் ஆகும். அதாவது ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி கணக்கிடக் கூடிய சொற்கள் எல்லாம் கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் என்ற வகைக்குள் அடங்கும். இவ்வகையான சொற்கள், ஒருமை-பன்மை அமைப்பைக் கொண்டு காணப்படும்.

உதாரணங்கள் :
  • Pen        -       பேனை
  • Book      -   புத்தகம்
  • Dollar    -   டொலர்
  • Room    -   அறை
  • Car         -   கார்

Uncountable Noun - கணக்கிட முடியாத பெயர்ச்சொல்

எண்ணிக்கையால் எண்ணி கணக்கிட முடியாத பெயர் சொற்கள் எல்லாம் 'கணக்கிடாமுடியாத பெயர்சொற்கள்' என்ற வகையில் அடங்கும். இவை Mass Noun எனவும் அழைக்கப்படும். இவ்வகையான சொற்களுக்கு பன்மை கிடையாது, இவை எப்போதும் ஒருமை நிலையியே காணப்படும். இவற்றை கணக்கிடுவதற்கு ஏனைய பெயர்ச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

உதாரணங்கள் :
  • Sugar  -   சீனி          Ex :  a packet (of sugar)
  • Water     -   நீர்                a glass (of water)
  • Oil         -   எண்னெய்         a bottle (of oil)
  • Milk       -   பால்              a cup (of milk)         
  • Sand      -   மணல்            a pile (of sand)
  • Cake      -   கேக்              a piece (of cake)
  • Meat      -   இறைச்சி          a kilo (of meat)
  • Rice       -   அரிசி             a bowl (of rice)


By : M.S.M. Naseem - MA, BA (Hons), PGDE


இவ்வாக்கத்தை pdf வடிவில் பெற்றுக்கொள்ள கீழுள்ள link ஐ click செய்யவும்

Nouns - பெயர்ச் சொற்கள்


பெயர்ச் சொற்கள் அடங்கிய பட்டியலை பார்வையிட கீழுள்ள link ஐ click செய்யவும்
         



Post a Comment

1 Comments