Advertisement

Responsive Advertisement

Singular and Plural - ஒருமை மற்றும் பன்மை


தமிழ் மொழியில் உள்ளளது போன்றுஆங்கிலத்திலும் ஒரு பொருளைக் குறிப்பவை “Singular – ஒருமை” எனவும் பல பொருட்களை குறிப்பவை “Plural – பன்மை” எனவும் கூறப்படும். இவ்வகையானஒருமை - பன்மை வேறுபாடுகள் எண்ணக்கூடிய பெயர்ச் செற்களுக்கே (Countable Nouns) காணப்படும்.

ஆங்கிலத்தில் ஒருமையான பெயர்ச் சொற்களை பன்மையாக மாற்ற வேண்டுமாயின் அச்சொற்களின் அமைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறான முறைகளைக் கையாளவேண்டும். அவற்றை இங்கு நோக்குவோம்.  
                                                              
1. ஆங்கிலத்தில் பெரும்பாலான சொற்களுடன் 's' ஜ சேர்ப்பதன் மூலம் அவற்றை பன்மையாக மாற்றலாம்.

           Singular                        Plural
  • Book (புத்தகம்)  -  Books (புத்தகங்கள்)         
  • Bag (பை)               -   Bags (பைகள்)
  • Card (அட்டை)     -   Cards (அட்டைகள்)
  • Hand (கை)              -   Hands (கைகள்)
  • Chair (கதிரை)     -   Chairs (கதிரைகள்)
  • Door (கதவு)         -   Doors (கதவுகள்)
  • Friend (நண்பண்)  Friends (நண்பர்கள்)
  • Pen (பேனை)        -   Pens (பேனைகள்)
  • Roads (பாதை)       - Roads (பாதைகள்)      
  • Egg (முட்டை)     -   Eggs (முட்டைகள்)

2. S/CH/SH/X போன்ற எழுத்துக்களை இறுதி எழுத்துக்களாக கொண்டு முடிவடையும் செற்களுடன் 'es' ஜ சேர்ப்பதன் மூலம் அவற்றை பன்மையாக மாற்றலாம்.

           Singular                              Plural
  • Bus (பேருந்து)         -      Buses (பேருந்துகள்)         
  • Flash (ஒளி)               -      Flashes (ஒளிகள்)
  • Class (வகுப்பு)          -      Classes (வகுப்புக்கள்)
  • Brush (தூரிகை)      -      Brushes (தூரிகைகள்)
  • Dress (ஆடை)     -     Dresses (ஆடைகள்)         
  • Fox (நரி)                -      Foxes (நரிகள்)
  • Beach (கடற்கரை)    -      Beaches (கடற்கரைகள்)
  • Box (பெட்டி)          -      Boxes (பெட்டிகள்)
  • Branch (கிளை)           -      Branches (கிளைகள்)
  • Tax (வரி)                 -      Taxes (வரிகள்)

3. “y” எழுத்தை இறுதி எழுத்தாகக் கொண்ட பெயர்சொற்களை பன்மையாக மாற்றுவதற்கு, அந்த y ஜ நீக்கி 'ies' ஜ சேர்ப்பதன் மூலம் அவற்றை பன்மையாக மாற்றலாம்.

           Singular                           Plural
  • City (நகரம்)              -   Cities (நகரங்கள்)     
  • Lady (பெண்)             -   Ladies (பெண்கள்)
  • Baby (குழந்தை)      -   Babies (குழந்தைகள்)
  • History (வரலாறு)   -   Histories (வரலாறுகள்)       
  • Family (குடும்பம்)   -   Families (குடும்பங்கள்)       

குறிப்பு : சொல்லின் இறுதி எழுத்தான, y இன் முன்னால் ஆங்கில உயிரெழுத்துக்களில் ஒன்று (a,e,I,o,u) காணப்பட்டால், அவற்றை பன்மையாக்க y ஐ நீக்காது 's' ஐ மட்டும் சேர்த்தால் போதுமானது.

          Singular                                     Plural
  • Day (நாள்)                 -    Days (நாட்கள்)        
  • Boy (சிறுவன்)         -    Boys (சிறுவர்கள்)                     
  • Tray (தட்டு)               -    Trays (தட்டுக்கள்)     
  • Donkey (கழுதை)     -  Donkeys (கழுதைகள்)        
  • Kidney (சிறுநீரகம்)  -    Kidneys (சிறுநீரகங்கள்)       

4. “f” அல்லது “fe” ஐ இறுதி எழுத்தாகக் கொண்டு முடிவடையும் பெயர்ச்சொற்களிலிருந்து f அல்லது fe ஐ நீக்கி 'ves' சேர்ப்பதன் மூலம் அவற்றை பன்மையாக மாற்ற முடியும்.

         Singular                         Plural
  • Half (பாதி)            -   Halves (பாதிகள்)
  • Leaf (இலை)        -   Leaves (இலைகள்)
  • Thief (திருடன்)   -   Thieves (திருடர்கள்கள்) 
  • Knife (கத்தி)         -    Knives (கத்திகள்)
  • Wife (மனைவி)  -    Wives (மனைவிகள்)   

குறிப்பு : “f,fe” இல் முடிவடையும் சில பெயர்சொற்களை பன்மையாக மாற்றுவதற்கு, அவற்றை நீக்காது 's' ஜ மட்டும் சேர்த்தால் போதுமானதாகும்.

            Singular                                      Plural
  • Roof (கூரை)                        -    Roofs (கூரைகள்)
  • Chief (தலைவர்                  -   Chiefs (தலைவர்கள்)
  • Belief (நம்பிக்கை)              -   Beliefs (நம்பிக்கைகள்)
  • Chef (சமையல்காரன்)     -   Chefs (சமையல்காரர்கள்)
  • Giraffe (ஒட்டகசிவிங்கி)  -   Giraffes (ஒட்டகசிவிங்கிகள்)


குறிப்பு 2 : “f,fe” இல் முடிவடையும் இன்னும் சில பெயர்சொற்களை மேற்கூறிய இருவகையிலும் பன்மையாக மாற்ற முடியும்.

               Singular                                                     Plural
  • Scarf (தாவணி)                         -       Scarfs or Scarves (தாவணிகள்)
  • Hoof (குளம்பு)                             -      Hoofs or Hooves (குளம்புகள்)
  • Dwarf (குள்ளன்)                        -       Dwarfs or Dwarves (குள்ளர்கள்)
  • Wharf (கப்பல்துறை மேடை) -  Wharfs or Wharves (க. மேடைகள்)

5. “o” ஜ இறுதி எழுத்தாகக் கொண்டு முடிவடையும் சில பெயர்ச்சொற்களுடன் 's' யும் மற்றும் இன்னும் சில சொற்களுடன் 'es' யும் சேர்ப்பதன் மூலம் அவற்றை பன்மையாக மாற்ற முடியும்.

             Singular                                          Plural
  • Video (காணொலி)                -    Videos (காணொலிகள்) 
  • Photo (புகைப்படம்)               -    Photos (புகைப்படங்கள்)
  • Hippo (நீர்யானை)                 -    Hippos (நீர்யானைகள்)
  • Kangaroo (கங்காறு)               -    Kangaroos (கங்காறுகள்)    
  • Echo (எதிரொலி)                   -    Echoes (எதிரொலிகள்)
  • Hero (கதாநாயகன்)              -   Heroes (கதாநாயகர்கள்)
  • Tomato (தக்காளி)                   -   Tomatoes (தக்காளிகள்)
  • Veto (தடுப்பதிகாரம்)            -   Vetoes (த.அதிகாரங்கள்)
  • Potato (உருளைக்கிழங்கு) -   Potatoes (உருளைக்கிழங்குகள்)

குறிப்பு : “o” ஐக் கொண்டு முடிவடையும் சில பெயர்ச்சொற்கள் 's' , 'es' ஆகிய இரண்டையும் பன்மை வடிவமாகப் பெற்றும் வரும்.

           Singular                                                 Plural
  • Mango (மாங்காய்)   -   Mangos or Mangoes (மாங்காய்கள்)
  • Mosquito (நுளம்பு)    -   Mosquitos or Mosquitoes (நுளம்புகள்) 
  • Zero (பூச்சியம்)        -   Zeros or Zeroes (பூச்சியங்கள்)
  • Buffalo (எருமை)     -   Buffalos or Buffaloes (எருமைகள்)

6. சில பெயர்சொற்கள் ஒருமை மற்றும் பன்மை ஆகிய இரு நிலைகளிலும், ஒரே மாதிரியான வடிவத்தைப் பெற்றவைகளாகக் காணப்படும்.

           Singular                                            Plural
  • Fish (மீன்)                                  -    Fish (மீன்கள்)         
  • Deer (மான்)                               -    Deer (மான்கள்)                                        
  • Sheep (செம்மறியாடு)           -    Sheep (செம்மறியாடுகள்)         
  • Furniture (தளபாடம்)               -    Furniture (தளபாடங்கள்)
  • Aircraft (ஆகாய விமானம்) -   Aircrafts (ஆகாய விமானங்கள்) 


குறிப்பு : வெவ்வேறு வகையான மீன் இனங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவற்றை பன்மையில்  'Fishes' என்று பாவிக்க முடியும்
உதாரணம் : all the fishes of the Pacific Ocean.

7. சில பெயர்சொற்கள் எப்போதும் பன்மையாகவே காணப்படும் அவற்றிற்கு ஒருமை இல்லை. இவ்வகையான சொற்களுக்கு முன் a pair of (ஒரு சோடி)என்பதை பயன்படுத்துவதன் மூலம் அவற்றை ஒருமையாக மாற்ற முடியும்.

உதாரணம் :
  • Pliers (குறடு)                                    - {a pair of Pliers}
  • Shorts (அரைக் கால்சட்டை)       - {a pair of Shorts}         
  • Sandals (பாதனி)                               - {a pair of Sandals}   
  • Binoculars (தொலை நோக்கி)       - {a pair of Binoculars}            
  • Shocks (காலுறை)                            - {a pair of Socks}    
  • Goggles (பாதுகாப்புக் கண்ணடி){a pair of Goggles}  
  • Gloves (கையுறை)                            -  {a pair of Gloves}
  • Scissors (கத்தரிக்கோல்)                 -  {a pair of Scissors}        
  • Trousers (கால்சட்டை)                     -  {a pair of Trousers}
  • Spectacles (மூக்குக் கண்ணாடி)   -   {a pair of Spectacles}


8. சில பெயர் செற்கள் பார்ப்பதற்கு பன்மை போலத் தோன்றினாலும் அவை ஒருமையாகும்.

உதாரணம் :
  • News (செய்தி)                          -  {that is good news}
  • Thanks (நன்றி)                          -  {my special thanks goes to my mother}
  • Politics (அரசியல்)                   -  {politics is a dirty game}                
  • Physics (பௌதீகவியல்)       -  {physics is my best subject}        
  • Lens (கண்ணாடி வில்லை) -  {his new lens is big}


9. ஆங்கிலத்தில் சில பெயர்சொற்கள் மேலே குறிப்பிடப்பட்ட எந்த விதிக்கும் உட்படாது, ஒரு ஒழுங்கு முறையற்ற விதத்தில் பன்மையாகக் காணப்படும். அவற்றை அறிந்து மனப்பாடம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவ்வகையான சொற்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

            Singular                                   Plural
  • Man (ஆண்)            -   Men (ஆண்கள்)        
  • Tooth (பல்)             -   Teeth (பற்கள்)
  • Foot (பாதம்)         -    Feet (பாதங்கள்)       
  • Woman (பெண்)      -   Women (பெண்ககள்)
  • Mouse (எலி)          -   Mice (எலிகள்)                           
  • Ox (எருது)            -   Oxen (எருதுகள்)
  • Goose (வாத்து)    -    Geese (வாத்துகள்)     
  • Person (நபர்)           -    People (நபர்கள்)
  • Child (சிறுவன்)   -    Children (சிறுவர்கள்)         
  • Fungus (பூஞ்சை) -     Fungi (பூஞ்சைகள்)

இவ்வாக்கத்தை pdf வடிவில் பெற்றுக்கொள்ள கீழுள்ள link ஐ click செய்யவும்

Singular and Plural



By : M.S.M. Naseem - MA, BA (Hons), PGDE
    



Post a Comment

0 Comments