தமிழ் இலக்கணத்தில் காணப்படுவது போன்று ஆங்கிலத்திலும் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என பால் பாகுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை இங்கு நோக்குவோம்.
Masculine Gender - ஆண்பால்
ஆண்கள், சிறுவர்கள் மற்றும் ஆணின விலங்குகள் என ஆண்வர்க்கத்தைச் சேர்ந்த அனைத்திற்கும் வழங்கப்படும் பெயர்களும் Masculine என்ற வகைக்குள் அடங்கும்.
- Kumar (குமார்)
- Man (ஆண்)
- Bridegroom (மணமகன்)
- Actor (நடிகன்)
- King (அரசன்)
- Hero (கதாநாயகன்)
- Father (அப்பா)
- Boy (சிறுவன்)
- Lion (ஆண் சிங்கம்)
- Bull (காளை மாடு)
- Sir (ஜயா)
- Brother (சகோதரன்)
- Husband (கணவன்)
- Son (மகன்)
- Uncle (மாமா/சிற்றப்பா/பெரியப்பா)
Feminine Gender - பெண்பால்
பெண்கள், சிறுமிகள் மற்றும் பெண்னின விலங்குகள் என பெண் வர்க்கத்தைச் சேர்ந்த அனைத்திற்கும் வழங்கப்படும் பெயர்களும் Feminine என்ற வகைக்குள் அடங்கும்.
- Fathima (பாத்திமா)
- Lady (யுவதி)
- Girl (சிறுமி)
- Sister (சகோதரி)
- Mother (அம்மா)
- Daughter (மகள்)
- Madam (அம்மணி)
- Wife (மனைவி)
- Queen (அரசி)
- Heroine (கதாநாயகி)
- Aunty (மாமி)
- Nun (பெண் துறவி)
- Bride (மணமகள்)
- Cow (பசு)
- Duck (பெண் வாத்து)
Common Gender - பொதுப்பால்
ஆங்கிலத்தில் அதிகமான பெயர்ச்சொற்கள் ஆண், பெண் ஆகிய இரு தரப்பினருக்கும் பொதுவாக பயன்படுத்தப் படுகின்றன. இவை பொதுப்பால் வகையில் அடங்கும்
- Baby (குழந்தை)
- President (ஜனாதிபதி)
- Singers (பாடகர்கள்)
- Principal (அதிபர்)
- Scientist (விஞ்ஞானி)
- Teachers (ஆசிரியர்கள்)
- Doctor (வைத்தியர்)
- Pilot (விமானி)
- Artists (கலைஞர்கள்)
- Children (குழந்தைகள்)
- Spy (உளவாளி)
- Friends (நண்பர்கள்)
- Student (மாணவர்)
- Enemy (எதிரி)
- Lawyers (வழக்கறிஞர்கள்)
Neuter Nouns - நடுநிலையான பெயர்ச்சொற்கள்
ஆண்பால், பெண்பால் என்ற வேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட வகையில் காணப்படுபவைகளுக்கு வழங்கப்படும் பெயர்கள், நடுநிலையான பெயர்ச் சொற்கள் எனும் வகையில் அடங்கும். இவை உயிரற்ற பொருட்பால் சொற்கள் எனவும் அழைக்கப்படும்.
- Ball (பந்து)
- Bed (படுக்கை)
- Book (புத்தகம்)
- Bench (இருக்கை)
- Floor (தரை)
- Cake (கேக்)
- Ground (மைதானம்)
- Table (மேசை)
- Fire (நெருப்பு)
- Broom (துடைப்பான்)
- Forest (காடு)
- Mirror (கண்ணாடி)
- Pen (பேனை)
- Rock (பாறை)
- Sky (வானம்)
* ஆங்கிலத்தில் விலங்குகளின் பெயரைப் பொருத்தமட்டில் அநேகமாக அவற்றினது ஆண்பால், பெண்பால், பொதுப்பால் பெயர்கள் வெவ்வேறு வடிவங்களில் காணப்படும். அதேவேலை, சிலவற்றின் ஆண்பால் மற்றும் பொதுப்பால் பெயர்கள் ஒரே வடிவிலும், பெண்பால் வேறு வடிவிலும் காணப்படும். இன்னும் சிலவற்றின் பெண்பால் மற்றும் பொதுப்பால் பெயர்கள் ஒரே வடிவிலும், ஆண்பால் வேறு வடிவிலும் காணப்படும். இவற்றிற்கான உதாரணங்களை இங்கு நோக்குவோம்.
Animal Masculine Feminine
Rabbit (முயல்) Buck Doe
Horse (குதிரை) Stallion Mare
Sheep (செம்மறி ஆடு) Ram Ewe
Pig (பன்றி) Boar Sow
Chicken (கோழி) Rooster Hen
Duck (வாத்து) Drake Duck
Cattle (ஆடு/மாடு) Bull Cow
Fox (நரி) Fox Vixen
Tiger (புலி) Tiger Tigress
Lion (சிங்கம்) Lion Lioness
ஆங்கிலத்தில் சில ஆண்பால் பெயர்ச் சொற்களை பெண்பாலாக மாற்றுவதற்கு, அவற்றுடன் 'ess' ஜச் சேர்க்கவேண்டும்.
Masculine Feminine
Actor (நடிகன்) - Actress (நடிகை)
Prince (இளவரசன்) - Princess (இளவரசி)
Emperor (பேரரசன்) - Empress (பேரரசி)
God (ஆண் கடவுள்) - Goddess (பெண் கடவுள்)
Author (நூலாசிரியர்) - Authoress (நூலாசிரியை)
Murderer (கொலைகாரன்) - Murderess (கொலைகாரி)
Master (எஜமான்) - Mistress (எஜமானி)
Heir (ஆண் வாரிசு) - Heiress (பெண் வாரிசு)
Host (விருந்தளிப்பவர்) - Hostess (வி. உபசரிக்கும் பெண்)
இவ்வாக்கத்தை pdf வடிவில் பெற்றுக்கொள்ள கீழுள்ள link ஐ click செய்யவும்
By : M.S.M, Naseem - MA, BA (Hons), PGDE
இவ்வாக்கத்தை pdf வடிவில் பெற்றுக்கொள்ள கீழுள்ள link ஐ click செய்யவும்
0 Comments